இருதய நாடு
ஏதோ ஒன்று என்னை
அழைக்க
எதிர்க்க முடியாமல் புறப்பட்டுவிட்டேன்
அவனுடன் அவன்
ஆளும்
தேசத்திற்கு
வீசிய மலைக்காற்று பேசியது முதல்
காதல்
மலையும் கடுகாயிற்று எனக்கு
உயிரை அவன்
சுமந்திருந்ததால்
மாபெரும் பயணத்தின் முதல்
அடிகளவை
அணைத்த கரங்களுக்குள்ளே உறைந்துகிடந்தேன்
தொடரும் பயணத்தில்,
என் அனுமதியின்றி அவன்
கேசம்
வருடிய
காற்று
எனக்கும் கொஞ்சம் விட்டுச்சென்றது
குறிஞ்சி மலரின்
வாசத்தை
மயக்கத்தில் மன்னித்து தொடர்ந்தேன்
பயணத்தின் இரண்டாம் அடிகளை
ஜென்மமாய் தொடர்ந்த பயணத்தில்
திடீரென காதல்
தந்த
காற்று
வெம்மை
தந்தது
புயலின் தாக்கத்தில் கண்ணில் நீர்
கரித்தது
எரிக்காத வெம்மை
இருந்தும், சுட்டது உள்ளத்தை
கானலாயினும் அவன்
பார்வை
தந்த
காதல்
மீட்டதால் தொடர்ந்தேன் அவனோடு
அவனாளும் தேசத்திற்கு
முடிந்ததோ என
நினைக்கிலேயே ஆரம்பமானது மீண்டும்
மருதத்தின் மேகங்கள் என்னை
குளிர்வித்தன
மருதத்தின் ஆண்மகன் தான்!!
பயணத்தில் தெரிந்து கொண்டேன் ,
அவன் பார்வையிலும் தீண்டலில்லை
எனத்தவிர பிறமாந்தர்
கோடிவருடம் நடக்கலாம் இவனுடன் கூடி
நெய்தலைச் சேர்ந்தபோது அவன்
நாளங்கள்
அலையாய் இசைமீட்ட
மின்னலை தாலியாய்
வார்த்தெடுத்து
மேளமாய் இடிமுழங்க
நீர்மலர்தூவி உறவுகள் வாழ்த்த
கரம் இணைந்து உயிர்
கரைய
பயணிக்கிறோம் அவன்
அரண்மனைக்குள்
மரணத்தின் கடைசி அடிகளை
குறிஞ்சி முல்லை பாலை மருதம் நெய்தல்
யாவும் கலந்து அவன் ஆளும்
பெரும் காதல் சாம்ராஜ்ஜத்தில்
அவனை ஆளும் சாம்ராஜபத்தினியாய்
அமர்கின்றேன் சிம்மாசனத்தில்
வாழ்வின் எல்லைவரை ..
கருத்துகள்
கருத்துரையிடுக