வரங்களை சாபமாக்குவது மனிதனே 
காற்றாய் கலைந்து விட்டாய் காதலனே 
எனை தீயில் கரைத்துவிட்டாய் 
நீ பொய்யாய் ஏற்றுகொண்டாய் என்னை 
நான் மெய்யாய் தொலைத்து நின்றேன் என்னை 
நெருங்கிவந்தாய் என்னை நெருங்கவைத்தாய் 
இன்றேன் நொருக்கிவிட்டாய் நெஞ்சம் கருக்கிவிட்டாய் 
சூரியன் என்று நினைத்திருந்தேன் 
பெரும் சுழலாய் என்னை மூழ்கடித்தாய் 

உன்மேல் விழுந்த கோடி நானய்யா 
எந்தன் ஆணி வேர் நீயய்யா 
மறைந்தாய் நீ மரத்தேன்  நான் 
பாவையின் நெஞ்சில் காதல் விதைத்தாய் 
விருட்ஷமாய் நின்றதை வேரோடு சரித்தாய் 
ஏமாற்றம் என்பதல்ல எந்தன் வருத்தம் 
நீ ஏமாற்றினாய் அதுதான் தருக்கம் 
மறந்துவிட நினைக்கின்றேன்  நினைவுகளில் கனக்கின்றாய் 
மரித்துவிட துடிகின்றேன் ஈன்றவறல்ல தவிக்கின்றேன் 
தவறு என்பதை நீ அறியவில்லையா 
அறிந்தும் பெண் நெஞ்சம் புரியவில்லையா 
வழிகின்ற வாழ்கையை நீ கொடுத்தாய் 
எனகென்ற ஒரு உயிர் நீ பறித்தாய் 
உன்கண்ணில் நீர் கொள்ளாது என்றேன் 
என்கண்ணில் நீயே தந்தாய் 
நீ ஏன்  தந்தாய் ?

இருந்தும் நேசிகின்றேன் உனையே சுவாசிகின்றேன் 



 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்