
இன்று feb14 காதலர் தினம் நீ திருமணத்தின் முன் சொன்னது போலவே என் கூடவே இருக்கின்றாய் இன்றைய நாளில் தட்டுத்தடுமாறி காலையில் என்னைக் குளிப்பாட்டினாய் உன் மூச்சில்தான் என் கூந்தல் துவட்டினாய் என் அருகே அமர்ந்து எனக்காய் உணவு சமைத்து உன் கையாலே ஊட்டிவிட்டாய் எனக்கே எனக்காக கவிதை செய்துதந்தாய் இப்போது இரவாகி விட்டது சற்று நேரம் முன்வரை பெரிய பெரிய இருமல்கள் இடையே என் மீதான காதலை எண்ணி எண்ணி மகிழ்ந்து உரைத்தாய் இப்போது என்ன ஆயிற்று உனக்கு? இறுதியாக உன் வை உரைத்த I LOVE U ... இந்த வார்த்தை என்ன நடந்தது உனக்கு ?.. நம் தள்ளாத வயதிலும் கொள்ளாமல் காதல் தந்தாயே இப்போது வைத்தியர் எனக்கென்று குறித்து வைத்த நாள் வரும் முன்னே என்னை மட்டும் தனியே விட்டு விட்டு எப்படி சென்றாய்? இதுதான் உன் காதலா ? உனக்கும் எனக்கும் ஓர் ஒப்பந்தம் உண்டு தானே யார் முன்னே போனாலும் உடன் கூட்டிச் செல்வதென்று இன்னும் நீ ஏன் என்னை அழைக்கவில்லை ? என்னால் மு..மு.முடியவில்லை.. ...