நீ சொன்ன மாடமாளிகை வேண்டாம்
    உன் மனது போதும் நான் குடியிருக்க
நீ சொன்ன பென்ஸ்கார் வேண்டாம்
சிறுவயது உப்புமூட்டை போதும் நான் நகர்ந்துசெல்ல
நீ சொன்ன எந்த சாதனமும் வேண்டாம்
உன் ஒற்றைப்பார்வை போதும் என்னை அழகுபடுத்த
நீ  விரித்த எந்த கம்பளமும் வேண்டாம்  
தார்ரோடு போதும் உன் கைகோர்த்து நடக்க
இந்த மலர்ப்படுக்கை வேண்டாம்
உன் நெஞ்சம் போதும் நான் தலை சாய்க்க
நீ சொன்ன நூற்றாண்டும் வேண்டாம்
ஓர் நாள் போதும் உன்னோடு வாழ



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்