சேரும் நாளை எண்ணி......
என் உதட்டின் புன்னகைக்கும்
உறைந்திருக்கும் என் மௌனத்திற்கும்
மையிட்ட கருவிழிக்கும்
கருங்குழல் சூடிய மல்லிகைக்கும்
கைவளையின் ஓசைக்கும்
நடுங்கும் என் ஆரத்திற்கும்
சினுங்கும் லோலாக்கிற்கும் அர்த்தம் என்ன?
மஞ்சள்ப் பட்டின் மாயம் தான் என்ன?
உந்தன் கனவிலா என் புன்னகை
வெட்கங்கள் புதைக்கவா என் மௌனம்
உன்னை மறைத்திடவா மைவிழிகள்
வலக்கரம் கவர்ந்தவன் காணவா வளையோசைகள்
மணம் முடிப்பவன் மனம் பறிக்கவா மல்லிகை
ஏறிடும் தாலியைக் எண்ணி நடுங்குதா ஆரம்
காதோர ரகசியங்கள் கசிந்ததாலா சிணுக்கம்
முன்வந்த முந்தானையில் உன்னை முடியவா மாயம்
எப்படிச் சொல்வேன் என்னவனே
பூக்கூடையின் மலர்கள் மாலையாக
மணவறையில் உந்தன் கரம் கொள்ள
ஒத்திகைகள் ஓராயிரம் பார்த்துவிட்டேன்
வாசற்கதவுகளைக் கேட்டுப்பார் கதறிவிடும்
நான் வலதுகால் எடுத்துவைத்த சேதி சொல்லி -என்னவனே
அணைத்து நிற்கிறேன் வாசற்கதவுகளை - உன்னைச்
சேரும் அந் நாளை எண்ணி.
கருத்துகள்
கருத்துரையிடுக