இடுகைகள்

ஜூன், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
உன் நினைவுகளை எல்லாம் குப்பைத் தொட்டியில் போட்டேன் காற்றோடு கலந்து மீண்டும் இதய வீடிற்குள் வரத் தவித்தன இறுக  மூடுகிறேன் கதவுகளை நினைவுகள் தவிக்கின்றன காதல் உள்ளே இருந்து கொல்கின்றது வாழ்ந்த இடத்தை யாரை விட்டு வைக்கும் இந்த காதல்
சிவனும் விஷம் அருந்தினாராம் என்னைப்போல காதல் இன்று வேலைத்தளத்தில் காதலை விஷம் , கலப்படம் என்றபோதுதோன்றியது ...தோல்வியில் காதலை தூற்றுவர் ...வெற்றியெனில் போற்றுவர் ..நீங்கள் வெல்வதற்கும்தோற்பதற்கும் காதல் என்ன செய்யும் பாவம் 
தங்கத்தில் கலப்படம் இருப்பது தெரிந்தும் நேசிக்கும் பெண் உள்ளம் நான் உன்னை நேசிப்பது போல
மரணிக்க ஆசைப்பட்டு மெல்ல மெல்ல விஷம் அருந்துவதும் காதலிப்பதும் ஒன்று தான்
பெற்ற தாயை கொல்லும் விஷம் தான் காதல் பாவம் கொஞ்சம் பருகியதும் கருக்கிவிட்டது ருதுவான இதயத்தையே
விழுதாய் கொடி விழுந்தாய் என்னில் படர்ந்தாய்  படித்தாய் கண் பார்த்தாய் இதயம் பறித்தாய்  இனித்தாய் உளம் கனிந்தாய் நெஞ்சம் கவர்ந்தாய்  நடித்தாய் இதழ் கடித்தாய் காதல் மறைத்தாய்  கடந்தாய் என்னில் கலந்தாய் உடன் அழைத்தாய்  சுகித்தாய் தோழி தவித்தாய் இனிப்பாய் தித்தித்தாய்  விரைந்தாய் எனை வரைந்தாய் சொல விளைந்தாய்  முறைத்தாய் பார்வையால் தகித்தாய் பாவை நீ எந்தாய்   இன்று .... தவிர்த்தாய் என் தவறு குறித்தாய் துணையே நீ நகர்ந்தாய்  கடிந்தாய் விஷமாய் வெறுத்தாய் எனை நீ மறுத்தாய்  மறந்தாய் காற்றில் கரைந்தாய் எங்கே தொலைந்தாய்  பறந்தாய் நெஞ்சில் கனத்தாய்  உயிர் குடித்தாய்  எந்தாய் கண்ணீராய் கரித்தாய்  மண்ணில்  எனை புதைத்தாய் 
தென்னிந்தியத் தமிழ் சினிமா மோகம் நமது படைப்புக்கு தடையா ?  பொருளாதார பிரச்சனையா ? திரைத்துறைக்கான சூழல் இல்லையா ? படைப்பாளர்கள் இல்லையா ? இலங்கைத் தமிழ் சினிமாவின் பின்தங்கலுக்கு காரணம் என்ன ? 
இலங்கைத் தமிழ் சினிமாவுக்கென்று தனித்த அடையாளம் உண்டு .கிடத்தட்ட இலங்கைத் தமிழ் சினிமாவும் , சிங்கள சினிமாவும் ஒரே  காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது ..இன்றைய சிங்கள சினிமா தனக்கான அடையாளத்தை தன்னகத்தே கொண்டு சிறந்த நிலையை அடைந்துள்ளது ..தமிழ் சினிமாவுக்கு என்ன நடந்தது ?....கருத்துக்களுக்கும் கலைஞர்களுக்கும் நிச்சயம் பஞ்சமில்லை ...ஆங்காங்கு தொட்டு செல்லும் குறும்படங்கள் சாட்சி ..தனது இடத்தை நெருங்க முடியாமல் எது தடுக்கின்றது ஈழ சினிமாவை ?
நீ சூரியன்  நான் விண்மீன்  காலங்களே பொருந்தவில்லை  நம் காதல் எப்படி பொருந்தும் ? நான் வரும் வேளையில் நீ நகர்ந்து விடுகிறாய்  நீ வரும் வேளையில் நான் மறைந்து விடுகிறேன்  சுழலும் நாளில் நீயும் நானும்  ஓரிடத்தில் சந்திப்போமா ?
படம்
எந்தையும் உந்தையும் ஒன்றல்லவா நிந்திக்கும் சிந்தனை தவறல்லவா நம்பியே நீட்டுவாள் பெண் கரத்தை  வாழ் வீசி சிதைப்பாயோ அவள் சிரத்தை பூமியில் பிறந்திட்ட பூவையரை கள்ளியால்  அன்று கரைத்தாரே காமத்தால் இன்று அழிக்காதே கோவிலிலே அவளை தொழுகின்றாய் தெருக் கொடியிலே அவளை சிதைக்கின்றாய் மண்மகள் வின்னவள் பெண்ணல்லவா கயவரைக் காவு கொள்வாளா ? பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்றாரே பேயிலும்  கொடியானா  மனிதனிவன் மங்கையர் மானம் சிதைக்காதே நீ பிறந்தது அவள் வசமே கனவுகளை நீ உடைக்காதே கால்களால் அவளை மிதிக்காதே காலன் உனையும் அணைப்பான் மறவாதே உன் காலானாய்  பெண்ணை மாற்றாதே பிறப்பவள் வசமே இனி இறப்பும் அளிப்பாள் உமக்கு வரமே
படம்
"அவள் விழிகள் மீனகள் அல்ல  அவற்றில் நானல்லவா நீந்துகின்றேன்  அவள் கூந்தல் இரவல்ல சூரியனை  அல்லவே சிறைப்பிடித்து இருக்கிறாள் அவள் மெல்லினமோ இடையினமோ அல்ல  தினம் தினம் கொள்கிறாள் காதலால் " யாரவள்? ?? கல்லூரிச் சாலையிலே கண்டேனே தாரகையை புன்னகைத் தூறலிலே தொலைத்தேனே என்னுயிரை காமணியே கொஞ்சம் பாராயா உன் கண்ணாலே பதில் கூறாயா வதைகின்றாயே நீ வரையறையே இல்லாமல் கரைகின்றேனே நான் காதல் சொல்லாமல் உன்னோடு வாழ்வதற்கே மண்ணோடு பிறந்தேன் பெண் கேசம் கலைக்கயிலே என் நெஞ்சம் கலைந்தேன் உன்னைத் தொடரும் நிலவாக நான் மாற வேண்டுமடி எந்தன் தாயக நீ மாற வேண்டுமடி காதல் தேசமே  உன்னை  கேட்கிறேன் உன்னில் ஆட்சி செய்யாவா உன் ஆணை ஏற்கிறேன் இவள் உன்னவள்   உயிர் வார்கின்றாய் அன்பே என்னுள்ளே கரைந்தேனே அன்றே உன்னுள்ளே காதல் தேசமெனில் காவல் நீதானே மை பூசி மறைத்தேன் உன்னை கை நீட்டி  வளைத்தாய் என்னை மலர்ந்தேன் உந்தன் நெஞ்சினிலே அன்பே 
 இலங்கை தமிழ்த் திரைப்படம் மிக உயர்வானா விஞ்ஞான அறிவின் விளைவாக கண்டறியப்பட்ட சினிமா மிக உன்னதமான ஒரு கலைப்படைப்பாகும் . வரலாற்று அடிப்படையில் இலக்கியங்கள் எவ்வாறு சமூகத்தின் கண்ணாடியாக நின்றனவோ அதே போன்ற பணியையே திரைப்படக் க்களையும் நிறைவேற்றுகின்றது ..திரை மொழி சக்தி வாய்ந்தது . இலங்கைத் திரை மொழி தனித்துவமானது 

இலங்கை தமிழ்த் திரைப்படம்

அட எங்கட நாட்டிலையும் தமிழ் சினிமா இருந்தது ...நிறைய நல்ல திரைப்படங்கள் வெளிவந்தது ... இண்டைக்கு அந்த  திரைப்படங்கள் எங்க ? தேடலின் போது மிக மிக குறுகிய அளவிலான திரைப்படங்களைப் பார்க்க கூடியதாக இருந்தது வருத்தம் தான் ஆனால் அதுவாவது கிடைத்தது என்று கொஞ்சம் சந்தோஷமும் ...50 மேல் திரைப்படங்கள் வந்தும் 26திரைப்படங்கள் தான்  திரைக்கு வந்து இருக்கு ..காரணங்கள் பல ..வந்த திரைப்படங்களில முழுமையாக இன்றைக்கு பார்க்க கூடிய வரையில் பத்திரப்படுத்தி எதுவும் இல்லை.. குத்துவிளக்கு திரைப்படத்தில் யாழ் நூலகம் காடப்படுள்ளது .. அங்கு இருந்த உயிர்நூல்கள் போல நம் நாடு பொக்கிஷங்களாக எமது தமிழ்த் திரைப்படங்களும் இருந்தன ...இருக்கின்றனவா இன்று எங்காவது ????இருப்பதை தொகுக்க சிறு கரம் ???