விழுதாய் கொடி விழுந்தாய் என்னில் படர்ந்தாய் 
படித்தாய் கண் பார்த்தாய் இதயம் பறித்தாய் 
இனித்தாய் உளம் கனிந்தாய் நெஞ்சம் கவர்ந்தாய் 
நடித்தாய் இதழ் கடித்தாய் காதல் மறைத்தாய் 
கடந்தாய் என்னில் கலந்தாய் உடன் அழைத்தாய் 
சுகித்தாய் தோழி தவித்தாய் இனிப்பாய் தித்தித்தாய் 
விரைந்தாய் எனை வரைந்தாய் சொல விளைந்தாய் 
முறைத்தாய் பார்வையால் தகித்தாய் பாவை நீ எந்தாய் 

 இன்று ....

தவிர்த்தாய் என் தவறு குறித்தாய் துணையே நீ நகர்ந்தாய் 
கடிந்தாய் விஷமாய் வெறுத்தாய் எனை நீ மறுத்தாய் 
மறந்தாய் காற்றில் கரைந்தாய் எங்கே தொலைந்தாய் 
பறந்தாய் நெஞ்சில் கனத்தாய்  உயிர் குடித்தாய் 
எந்தாய் கண்ணீராய் கரித்தாய்  மண்ணில்  எனை புதைத்தாய் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்