"அவள் விழிகள் மீனகள் அல்ல 
அவற்றில் நானல்லவா நீந்துகின்றேன் 

அவள் கூந்தல் இரவல்ல சூரியனை 
அல்லவே சிறைப்பிடித்து இருக்கிறாள்

அவள் மெல்லினமோ இடையினமோ அல்ல 
தினம் தினம் கொள்கிறாள் காதலால் "

யாரவள்? ??

கல்லூரிச் சாலையிலே கண்டேனே தாரகையை
புன்னகைத் தூறலிலே தொலைத்தேனே என்னுயிரை
காமணியே கொஞ்சம் பாராயா
உன் கண்ணாலே பதில் கூறாயா
வதைகின்றாயே நீ வரையறையே இல்லாமல்
கரைகின்றேனே நான் காதல் சொல்லாமல்
உன்னோடு வாழ்வதற்கே மண்ணோடு பிறந்தேன்
பெண் கேசம் கலைக்கயிலே என் நெஞ்சம் கலைந்தேன்

உன்னைத் தொடரும் நிலவாக நான் மாற வேண்டுமடி
எந்தன் தாயக நீ மாற வேண்டுமடி
காதல் தேசமே  உன்னை  கேட்கிறேன்
உன்னில் ஆட்சி செய்யாவா உன் ஆணை ஏற்கிறேன்

இவள் உன்னவள் 
 உயிர் வார்கின்றாய் அன்பே என்னுள்ளே
கரைந்தேனே அன்றே உன்னுள்ளே
காதல் தேசமெனில் காவல் நீதானே
மை பூசி மறைத்தேன் உன்னை
கை நீட்டி  வளைத்தாய் என்னை
மலர்ந்தேன் உந்தன் நெஞ்சினிலே அன்பே 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்