எந்தையும் உந்தையும் ஒன்றல்லவா
நிந்திக்கும் சிந்தனை தவறல்லவா
நம்பியே நீட்டுவாள் பெண் கரத்தை
 வாழ் வீசி சிதைப்பாயோ அவள் சிரத்தை
பூமியில் பிறந்திட்ட பூவையரை
கள்ளியால்  அன்று கரைத்தாரே
காமத்தால் இன்று அழிக்காதே
கோவிலிலே அவளை தொழுகின்றாய்
தெருக் கொடியிலே அவளை சிதைக்கின்றாய்
மண்மகள் வின்னவள் பெண்ணல்லவா
கயவரைக் காவு கொள்வாளா ?
பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்றாரே
பேயிலும்  கொடியானா  மனிதனிவன்
மங்கையர் மானம் சிதைக்காதே
நீ பிறந்தது அவள் வசமே
கனவுகளை நீ உடைக்காதே
கால்களால் அவளை மிதிக்காதே
காலன் உனையும் அணைப்பான் மறவாதே
உன் காலானாய்  பெண்ணை மாற்றாதே
பிறப்பவள் வசமே இனி
இறப்பும் அளிப்பாள் உமக்கு வரமே








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்