இடுகைகள்

கண்களும் காதலும் என் கண்கள் வியர்த்த போது உதடுகள் புன்னகைத்தபடி கேட்டது அவளைப் பார்த்த போது பேசத்தெரியாமலா நான் மௌனியாக இருந்தேன் அன்று நீ பேசினாய் அல்லவா இன்று அனுபவி என்று ...
என் அகராதி தென்றல் - உன் உன்பார்வை இசை - உன் வார்த்தை  தீ - உன் கோபம்  வானம் -அன்பு  நீர் - உன் அணைப்பு  காதல் - நீ  உயிர் - சத்தியமாக நீங்கள் தான்  அம்மா ..........  
சேரும்   நாளை   எண்ணி ...... என்   உதட்டின்   புன்னகைக்கும் உறைந்திருக்கும்   என்   மௌனத்திற்கும் மையிட்ட   கருவிழிக்கும் கருங்குழல்   சூடிய   மல்லிகைக்கும் கைவளையின்   ஓசைக்கும் நடுங்கும்   என்   ஆரத்திற்கும் சினுங்கும்   லோலாக்கிற்கும்   அர்த்தம்   என்ன ? மஞ்சள்ப்   பட்டின்   மாயம்   தான்   என்ன ? உந்தன்   கனவிலா   என்   புன்னகை வெட்கங்கள்   புதைக்கவா   என்   மௌனம் உன்னை   மறைத்திடவா   மைவிழிகள் வலக்கரம்   கவர்ந்தவன்   காணவா   வளையோசைகள் மணம்   முடிப்பவன்   மனம்   பறிக்கவா   மல்லிகை ஏறிடும்   தாலியைக்   எண்ணி   நடுங்குதா   ஆரம் காதோர   ரகசியங்கள்   கசிந்ததாலா   சிணுக்கம் முன்வந்த   முந்தானையில்   உன்னை   முடியவா   மாயம் எப்படிச்   சொல்வேன்   என்னவனே பூக்கூடையின்   மலர்கள்   மாலையாக மணவறையில்  ...
கண்களும் காதலும் ஐயோ ! இந்த கண்களை என்னதான் செய்வது இப்படிக் காட்டிக் கொடுக்கின்றதே என் காதலை
படம்
இன்று feb14 காதலர் தினம் நீ திருமணத்தின் முன் சொன்னது போலவே என் கூடவே இருக்கின்றாய் இன்றைய நாளில் தட்டுத்தடுமாறி காலையில் என்னைக் குளிப்பாட்டினாய் உன் மூச்சில்தான் என் கூந்தல் துவட்டினாய் என் அருகே அமர்ந்து எனக்காய் உணவு சமைத்து உன் கையாலே ஊட்டிவிட்டாய் எனக்கே எனக்காக கவிதை செய்துதந்தாய் இப்போது இரவாகி விட்டது சற்று நேரம் முன்வரை பெரிய பெரிய இருமல்கள் இடையே என் மீதான காதலை எண்ணி எண்ணி   மகிழ்ந்து உரைத்தாய் இப்போது என்ன ஆயிற்று உனக்கு? இறுதியாக உன் வை உரைத்த I LOVE U ... இந்த வார்த்தை என்ன நடந்தது உனக்கு ?.. நம் தள்ளாத வயதிலும் கொள்ளாமல் காதல் தந்தாயே இப்போது வைத்தியர் எனக்கென்று   குறித்து வைத்த நாள் வரும் முன்னே என்னை மட்டும் தனியே விட்டு விட்டு எப்படி சென்றாய்? இதுதான் உன் காதலா ? உனக்கும் எனக்கும் ஓர் ஒப்பந்தம் உண்டு தானே யார் முன்னே போனாலும் உடன் கூட்டிச் செல்வதென்று இன்னும் நீ ஏன் என்னை அழைக்கவில்லை ? என்னால் மு..மு.முடியவில்லை.. ...
படம்
 தினமும் ஒரு முத்தம் எதிர்பாரா நேர அணைப்பு  சின்ன சின்ன சில்மிஷம்  செல்லமாய் ஒரு கோபம்  எனக்கான  முழுமையான ஒரு நிமிடம் என்னை சிவக்க வைக்கும் பார்வை பிறர் அறியாமல் நீ சொல்லும் காதல் இத்தனையும் தருவதானால் சொல் இப்போதே கையொப்பம் இடுகிறேன் உன் காதல் விண்ணப்பத்தில் சம்மதமா ? 
படம்
    நீ சொன்ன மாடமாளிகை வேண்டாம்     உன் மனது போதும் நான் குடியிருக்க நீ சொன்ன பென்ஸ்கார் வேண்டாம் சிறுவயது உப்புமூட்டை போதும் நான் நகர்ந்துசெல்ல நீ சொன்ன எந்த சாதனமும் வேண்டாம் உன் ஒற்றைப்பார்வை போதும் என்னை அழகுபடுத்த நீ  விரித்த எந்த கம்பளமும் வேண்டாம்   தார்ரோடு போதும் உன் கைகோர்த்து நடக்க இந்த மலர்ப்படுக்கை வேண்டாம் உன் நெஞ்சம் போதும் நான் தலை சாய்க்க நீ சொன்ன நூற்றாண்டும் வேண்டாம் ஓர் நாள் போதும் உன்னோடு வாழ