இடுகைகள்

ஜூலை, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
 புகையிரதம் வந்துவிடுமே என்று கால்களிலே சக்கரத்தை கட்டிக்கொண்டு வேகமாய் வியர்த்து வந்தேன் அன்று உன் விழிச்  சக்கரத்தில் மாட்டிக்கொள்ளப்போவது தெரியாமல் நான்  வந்தும் வரவில்லை புகையிரதம் வழக்கம் போல ஐந்து  நிமிடம் அமரவைத்தது பிளாட்பார இருக்கையிலே தலை சாய்ந்து அமர்ந்து இருந்தேன் பின்னாலிருந்து ஒரு சங்கீதம் கண் திறந்து பார்த்தேன் செல்வோனை அடக்கிவிட்டு என் அருகில் வந்து அமர்ந்தாய் ஒற்றை பார்வையை என் மீது வீசிவிட்டு உன் கற்றைக் குழலை வருடினாய் சித்தம் கலங்கி உன் விழிச் சிறகில் சிக்கி இருக்க என்னிடமே திரும்பி ரெயின்லேட்டா ?என்றாய் நான்தான் சொல்லி இருக்கவேண்டும் பதில் சொல்ல விடவில்லை ஒலிபெருக்கி அறிவித்துவிட்டது உனக்கான பதிலை சின்னப் புன்னகையில் என்னை கிறங்கடித்து திரும்பிவிட்டாய் ரயில் வந்தால் நீசென்றுவிடுவாய் என்று  ஐந்து நிமிடம் அரை மணிநேரமாகவாவது மாறட்டும்  என்று மனதுக்குள் துதித்தேன்  மனமிரங்கவில்லை கடவுள்  ரெயிலும் வந்தது என் நண்பனும் வந்தான...
படம்
 எனக்குத் திருமணமாம் அம்மாதான் சொன்னாள் எத்தனையோ புகைப்படங்கள் எனக்காக வந்திருக்கிறதாம் உனக்குப் பிடித்தால்  தான் சம்மதமாம் இதையும் அவள்தான் சொன்னாள் எனக்குத்தான் உன்னை பிடித்து விட்டதே பார்க்காமலே நகர்த்திவிட்டேன் புகைப்படங்களை நீயும் அப்படித்தான் செய்திருப்பாய் போல அதனால் தான் தெரியாமலே போய் விட்டது என்படம் உன்னிடம் உன்படம் என்னிடமும் காட்டப்பட்டதும் 
படம்
என் மூச்சில் கலந்தவளே  என் கனவில் நடந்தவளே என் இதயத்தில் விழுந்தவளே  என் உயிராய் மலர்ந்தவளே நேசிக்கும் இதயம் துடிக்குதடி வலியில் துளிராய் நடுங்குதடி வலைவீசி தேடும் கள்வன்  உன் சிலை அழகில் மயங்கி நின்றேன் கொலையோடு பார்க்கும் பார்வையை  உன் நிழலோடு தொலைத்துவிட்டேன் வான் நிலவை என்றும் சூரியன் நெருங்கிட முடியாதோ இரவு பகல் என்னும் ஒழுக்கத்திலே  என் நிலவே நீ  ஏன் மறைந்துகொண்டாய் வழி வாசல் திறந்து வாராயோ விழி வாசல் நுழைய மாட்டாயோ என் ஆண்மையும் கிறங்குது உன்னிடத்தில் உன் பெண்மையும் இரங்குமோ என் இடத்தில் முடி சூடா மன்னனாய் இருந்தேன் உன் முடி உதிரும் இடத்தில் மண்னாய் போவேன் இடியாய் மண்ணில் விழுந்தேன் இனி உன் மடி தேடிடும் மலராவேன் முதன்முதலாய் உள்ளம் வலிக்கிறதே எனை ராமனாய் மாற்ற துடிக்கிறதே
படம்
ஒவ்வொரு நாளும் நடக்கும் ஒவ்வொரு பாடத்தின் போதும் நீ என்னை எத்தனை தடவை பார்த்துவிட்டாய் சீ வெட்கம் கெட்டவன் என்ற போதுதான் உறைத்தது நான் எவ்வளவு வெட்கம் கேட்டவள் என்று
படம்
என்றோ நான் உனக்கு உரைத்த காதலுக்கு வரவில்லை இன்னும் பதில் உன் நினைவுகள் எனக்கு தந்துகொண்டிருக்கும் கவிதைகளைத் தொகுப்பாக்கி அனுப்பி வைத்தேன்  அழைத்தாய்  நீ   என்று நான் எங்கு உன்னை சந்தித்தேனோ அங்கேயே சந்திப்போம் என்றாய் சந்தித்தோம் ஆழிப்பேரலையின் முன் அமைதியாய் நீயும் நானும் பலமணிநேரம் பூட்டுக்களை யாராவது உடைத்தால் தானே உள் நுழைய மீண்டும் உடைக்க துணிந்தேன் நானே என் உதடுகள் திறப்பதற்குள் உன் இதழ்கள் கேட்டது இது நிஜமா ? என்று எது? உன் கவிதைகள் இன்னும் என்னைக் காதலிக்கின்றனவா ? புல்வெளி மீதான காதலுடன் உன் கால்கள் இன்னும் என் வரவுக்காய் காத்திருக்கின்றதா ? என் இதழ்கள் பேசவில்லை என் விழிகள் பேசியது உன்னுடன் புரிந்துகொண்டாய் பரவாயில்லையே இப்போது நீயும் நன்றாகத்தான் கவி எழுதுகிறாய் உன் இதழ்களாலே என் இதழ்களில்
படம்
வாழ்ந்துவிடத் துடிக்கின்ற இதயத்தை உன் வார்த்தைகள் மரணித்துவிட்டன செத்துவிடத் துடிக்கின்ற இதயத்தை உன் விழிகள் ஜனனிக்கின்றன
படம்
ஒவ்வொரு நாளும் உன்னை மறந்துவிட்டேன் என்பதனை உறுதிப்படுத்த உன் ஞாபகங்களை சரிபார்க்கிறது மனது பனிக்கட்டிகள் கரையக் கரைய கடலின் கனம் அதிகரிக்குமே தவிர குறைவதில்லையே
படம்
 விலகிடத்தான் நினைக்கின்றேன் விலகியும் உன்னையே நினைக்கிறேன் 
படம்
விழிகள் கலங்கிட நினைக்கிறது மனம் கலங்காமலே தடுக்கிறது காரணம் நீ வந்த வழியில் உன் கால்த்தடங்களை அழித்துவிடக் கூடாது என்பதற்காக
படம்
மேலே தூக்கி எறிந்த பந்து மீண்டும் கை வந்ததைப் போல நீ தூக்கி எறிந்த பின்னும் என் இதயத்தையே வந்தடைகிறது உன் மீதான காதல்
படம்
காதலைச் சொல்ல நினைக்கவில்லை சொன்னபோது காத்திருக்கச் சொல்வாய் எனவும் எண்ணவில்லை நீ காதலிக்கின்றேன் என்றுதான் சொல்வாய் என நினைத்தேன் என் மனம் நினைத்தது போலவே சொன்னாய் காதலிக்கிறேன் என்று என்னையல்ல வேறொருத்தியை
படம்
என் உயிர் நீ என்று கடல் நதி காற்று அத்தனைக்கும் தெரியும் நான்  காதலிக்கும் உன்னை தவிர  
படம்
 பற்றிக் கொண்ட உடும்பினைப் போல் உன்னையே தொடர்கிறது என் பார்வை அவ்வப்போது கரைமேவும் அலையாய் எனை மீட்கிறது உன் பார்வை 
படம்
ஒவ்வொரு நிமிடமும் உன் வருகைக்காக காத்திருக்கும் என் கால்களுக்கும் வந்துவிட்டது காதல் புல்வெளி மீது
படம்
 என்ன  அதிசயம் எத்தனை பேர் மத்தியிலும் உன் காலடி ஓசைகளை மட்டும் பிரித்தறிகிறதே என் காதுகள்   
படம்
 ஆயிரம் வேலைகள்  இருந்தாலும்  உன்னைப் பார்ப்பதே முதல் வேலையாயிற்று 
படம்
  ஆட்சி மாற்றம் நிகழ்வதை அறிந்திருக்கிறேன் என்னில் மாற்றம்  நிகழ்ந்ததே உன் ஆட்சியினால் தானே 
படம்
 ஒவ்வொரு படியாக நீ இறங்கி வந்த போது சிந்திக்கவில்லை  நீ என் இதயக் கருவறையில் இத்தனை படிஏறியிருப்பாய்  என்று 
படம்
ஏதோ நினைவில் நடக்கையில் எதிரில் வந்த உன்னை மோதியதே என் மீதான உன் முதல் ஸ்பரிசம் ..
படம்
என் உயிர் ஆனவளே என் விரல் பிடித்து எழுதத் தொடங்கிய முதல் எழுத்து முதல்  கடைசி மூச்சு வரை உன்னைப்  பற்றிய வாசிபையும்  சுவாசிப்பையுமே எனக்குத் தந்தது