என்றோ நான் உனக்கு உரைத்த காதலுக்கு
வரவில்லை இன்னும் பதில் உன் நினைவுகள்
எனக்கு தந்துகொண்டிருக்கும் கவிதைகளைத்
தொகுப்பாக்கி அனுப்பி வைத்தேன் 
அழைத்தாய்  நீ   என்று நான் எங்கு உன்னை சந்தித்தேனோ
அங்கேயே சந்திப்போம் என்றாய் சந்தித்தோம்
ஆழிப்பேரலையின் முன் அமைதியாய் நீயும் நானும்
பலமணிநேரம்
பூட்டுக்களை யாராவது உடைத்தால் தானே உள் நுழைய
மீண்டும் உடைக்க துணிந்தேன் நானே என்
உதடுகள் திறப்பதற்குள் உன் இதழ்கள் கேட்டது
இது நிஜமா ? என்று
எது?
உன் கவிதைகள் இன்னும் என்னைக் காதலிக்கின்றனவா ?
புல்வெளி மீதான காதலுடன் உன் கால்கள் இன்னும்
என் வரவுக்காய் காத்திருக்கின்றதா ?
என் இதழ்கள் பேசவில்லை
என் விழிகள் பேசியது உன்னுடன்
புரிந்துகொண்டாய் பரவாயில்லையே இப்போது நீயும்
நன்றாகத்தான் கவி எழுதுகிறாய்
உன் இதழ்களாலே என் இதழ்களில்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்