என் மூச்சில் கலந்தவளே
 என் கனவில் நடந்தவளே
என் இதயத்தில் விழுந்தவளே
 என் உயிராய் மலர்ந்தவளே
நேசிக்கும் இதயம் துடிக்குதடி
வலியில் துளிராய் நடுங்குதடி
வலைவீசி தேடும் கள்வன்
 உன் சிலை அழகில் மயங்கி நின்றேன்
கொலையோடு பார்க்கும் பார்வையை
 உன் நிழலோடு தொலைத்துவிட்டேன்
வான் நிலவை என்றும் சூரியன் நெருங்கிட முடியாதோ
இரவு பகல் என்னும் ஒழுக்கத்திலே
 என் நிலவே நீ  ஏன் மறைந்துகொண்டாய்
வழி வாசல் திறந்து வாராயோ
விழி வாசல் நுழைய மாட்டாயோ
என் ஆண்மையும் கிறங்குது உன்னிடத்தில்
உன் பெண்மையும் இரங்குமோ
என் இடத்தில்
முடி சூடா மன்னனாய் இருந்தேன்
உன் முடி உதிரும் இடத்தில்
மண்னாய் போவேன்
இடியாய் மண்ணில் விழுந்தேன் இனி
உன் மடி தேடிடும் மலராவேன்
முதன்முதலாய் உள்ளம் வலிக்கிறதே
எனை ராமனாய் மாற்ற துடிக்கிறதே

கருத்துகள்

  1. அழகான கவிதை.
    "முதன்முதலாய் உள்ளம் வலிக்கிறதே
    எனை ராமனாய் மாற்ற துடிக்கிறதே "

    என்னை கவர்ந்த வரிகள்....
    ஒரு சிறந்த ஆரம்பம் ஆனால் ஏன் இடையில் நிறுத்தப்பட்டது?
    மேலும் பதிவுகளை மேற்கொள்ள என் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்